Mutual Funds விரிவான அலசல் -தொடர் 3(open ended ,closed ended)என்றால் என்ன ?





இந்த பதிவில் , open ended ,closed ended  பற்றி எழுதுகிறேன். நாம் பணம் போடும் கால அளவை பொருத்து  இரண்டு வகை படும்.

ஒண்ணு, ஓப்பன் எண்டட். இதுல எப்போ வேணும்னாலும் பணத்தைப் போடலாம், எடுக்கலாம்.
இன்ணொண்ணு குளோஸ்ட் எண்டட். இதுல பணத்தைப் போட்டா அதனோட முதிர்வின்போதுதான் எடுக்கமுடியும். (குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தை எடுக்க நிறுவனங்களே வாய்ப்புக் கொடுக்கும் திட்டங்களும் உண்டு) அதேபோல திட்டம் ஆரம்பிக்கப்படும்போதுதான் முதலீடு செய்யமுடியும். பொதுவாக குளோஸ்ட் எண்டட் திட்டத்துல மூணு வருஷத்துக்கு போட்டதை எடுக்கமுடியாது.

சரி, ஏதோ ஒண்ணுல நாம முதலீடு செஞ்சாச்சு. நாம முதலீடு செஞ்ச தொகை வளரும்போது, லாபத்தை நமக்கு பிரிச்சுக் கொடுப்பாங்க. அப்படி கொடுக்கிறதுல டிவிடெண்ட், குரோத் அப்படினு இரண்டு முறைகள் இருக்கு. இடையில பணம் தேவைன்னு நினைக்கிறவங்க டிவிடெண்ட் ஆப்ஷனை செலக்ட் செஞ்சுக்கிடணும். கடைசியில மொத்தமாக் கிடைச்சா போதும்னு நினைச்சா குரோத் ஆப்ஷனை எடுத்துக்கிடலாம்.
எல்லாத்துக்குமே 'முடிவு'னு ஒண்ணு வேணுமில்லையா..? மியூச்சுவல் ஃபண்ட்டைப் பொறுத்தவரைக்கும் பணத்தை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கலாம் அப்படிங்கிற முடிவும், 'எனக்கு இவ்வளவு லாபம் கிடைச்சா போதும்'ங்கிற இலக்கும் ரொம்ப முக்கியமானது.
பஸ்ல போறோம்... அதுபாட்டுக்கு போய்க்கிட்டுத்தான் இருக்கும். நாம, நம்மோட ஸ்டாப் வந்ததும் இறங்கிடுறோம் இல்லையா..? அதேதான். நாம போட்ட பணம், நாம நினைச்ச அளவுக்குப் பெருகிடுச்சுனா 'டாடா பை... பை...' சொல்லிட்டு வெளியேறிட வேண்டியதுதான். அதே மாதிரி இன்னொரு விஷயமும் ரொம்ப முக்கியம். ' நம்மால் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும்?' அப்படிங்கிறதையும் தெளிவா தீர்மானிச்சுக்கிடணும்.

ஒரு ஃபண்ட், கடந்த காலங்கள்ல நல்ல லாபம் தந்திருக்கானு பார்க்கணும். அதேமாதிரி அந்தக் குறிப்பிட்ட ஃபண்டை வழிநடத்திக்கிட்டு போற தளபதியான ஃபண்ட் மேனேஜர், அதுக்கு முன்னாடி நிர்வகிச்ச திட்டங்கள் நல்ல லாபம் கொடுத்திருக்கானும் பார்க்கணும். அந்த ஃபண்டுகள் லாபம் தந்திருந்தா, இப்போ நிர்வகிக்கிறதும் லாபம் கொடுக்கும்னு நம்பலாம். இதைத் தவிர, நம்மகிட்ட வசூலிக்கிற பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் எந்தத் துறைப் பங்குகள்ல முதலீடு செய்யப்போறதாச் சொல்றாங்களோ, அந்தத் துறைக்கு எதிர்கால வளர்ச்சி இருக்குதானு பார்க்கிறதும் முக்கியம். நல்ல ஃபண்ட்டைப் பற்றின விஷயங்கள் பத்திரிகை, டி.வி. இன்டர்நெட் எல்லாத்துலயும் ஏராளமா கிடைக்கும். அதையும் படிச்சு தெரிஞ்சுக்கிடலாம். கடைசியில நம்ம தேவைக்கு எது பொருந்துதோ அதை செலக்ட் செய்யறதுதான் புத்திசாலித்தனம். இதுபோக வழங்குப் பத்திரத்திலும் நிறைய தகவல்கள் இருக்கும். ஃபண்டில் முதலீடு செய்யும்போது இந்த வழங்குப் பத்திரம் (Offer Document) கொடுப்பாங்க. அதையும் கவனமாப் படிச்சிடணும்............



2 comments: